குதிரைப்படைப் போர் 415. | முடுகிய பவனப தத்திலு கக்கடை | | முடிவினில் உலகமு ணச்சுடர் விட்டெழு கடுகிய வடஅன லத்தினை வைத்தது களமுறு துரகக ணத்தின்மு கத்திலே. | (பொ-நி.) பவன பதத்தில், களம் உறு, துரககணத்தின் முகத்திலே, முடிவினில், சுடர்விட்டெழு, வட அனலத்தினை வைத்தது (ஒத்தது); (எ-று.) (வி-ம்.) பவனம்-காற்று. பதம்-தன்மை. உகக்கடை-முடிவுயுக. உண- உண்ண. சுடர்விட்டு எழு-ஒளி வீசி. மேலோங்குகின்ற. வட அனலம்- வடவாமுகாக்கினி. களம்-போர்க்களம். துரகம்-குதிரை. கணம்-கூட்டம். குதிரைகளின் முகத்திலே வடவைக்கனலை வைத்தாற்போலிருந்த தென்க. (12) |
|
|