யானையொடு பொருவோர் இயல்பு
 
416.களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர்
      கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில
இளமுலை எதிர்பொரும் அப்பொழு திப்பொழு
     தெனவெதிர் கரியின்ம ருப்பின்முன் நிற்பரே.

     (பொ-நி.) சிலர்,  துரக  கணத்தின்  முகத்து;  கறுவிலர்,  இளமுலை
எதிர்பொரும் அப்பொழுது, இப்பொழுதென, கரியின் மருப்பின்முன், நிற்பர்;
(எ-று.)

     (வி-ம்.) களம்-போர்க்களம். துரகம்-குதிரை. கணம்-கூட்டம், கறு-சினம்.
கலவி-புணர்ச்சி. நித்திலம்-முத்து. கரி-யானை. மருப்பு-தந்தம். சிலர்  குதிரை
முகத்து நிற்றிலை வெறுத்து யானை முகத்து நின்றனர் என்க.        (13)