இதுவும் அது 417. | எதிர்பொரு கரியின்ம ருப்பைஉ ரத்தினில் | | இறஎறி படையினி றுத்துமி றைத்தெழு சதுரர்கள் மணியக லத்தும ருப்பவை சயமகள் களபமு லைக்குறி ஒத்ததே. |
(பொ-நி.) கரியின் மருப்பை, உரத்தினில் இற, இறுத்து எழு சதுரர்கள் அகலத்து மருப்பு அவை, முலைக்குறி ஒத்தது: (எ-று.) (வி-ம்.) கரி-யானை. உரம்-மார்பு. இற-இற்றுப்போகும்படி. எறிபடை-வாள். இறுத்து-ஒடித்து. மிறைத்து-இறுமாந்து. சதுரர்கள்-திறமை மிகுந்த வீரர்கள். அகலம்-மார்பு. மருப்பு-(இற்ற) தந்தங்கள்.சயமகள்-வெற்றித் திருமகள். களபம்-கலவைச் சாந்து மார்பில் முறிந்து தங்கிய தந்தம் முலைக்குறி ஒத்ததென்க. (14) |