குதிரைவீரர் யானைப்படையை அழித்தமை
 

418.சயமகள் களபமு லைக்கணி யத்தகு
      தனிவடம் இவையென மத்தக முத்தினை
அயம்எதிர் கடவிம தக்கரி வெட்டினர்
     அலைபடை திரைகள்க ளத்துநி ரைக்கவே.

     (பொ-நி.)   படைநிரைகள்   நிரைக்க   அயம்   கடவி   முலைக்கு
அணியத்தகும் வடம் இவை என, மதக்கரி முத்து மத்தகத்தினை வெட்டினர்; (எ-று.)

     (வி-ம்.) வடம்-(முத்து)  மாலை. முத்து  மத்தகத்தினை  என இயைக்க.
அயம்-குதிரை.  கடவி-செலுத்தி.   கரி-யானை.  அலை-கடல்.  நிரை-வரிசை.
நிரைக்க-பரந்துகிடக்க.  மதக்கரி  மத்தகத்தினை வெட்டியபோதுதிர்ந்த முத்து
வரிசைகள் முத்து மாலையை ஒத்தவென்க.                      (15)