கணவரோ டுடனுறையுநிலை கூறி விளித்தது 42. | விலையி லாதவடம் முலையி லாடவிழி | | குழையி லாடவிழை கணவர்தோள் மலையி லாடிவரு மயில்கள் போலவரு மடந லீர்கடைகள் திறமினோ. |
(பொ-நி) வடம் முலையில் ஆட, விழி குழையில் ஆட, கணவர் தோள் மலையில் ஆடிவரும் மயில்கள் போல வரும் நலீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) வடம் - முத்துமாலை. விழி - கண். குழை - காதணி. விழி குழைவரை ஓடிய வென்க. விழை-விரும்பும். தோள்மலை - தோளாகிய மலைமீது; பண்புத்தொகை. நலீர்-நல்லீர்;பெண்களே. கணவர் தோள்மலையில் மயில் போன்றனர் பெண்கள். மயில்கள் மலைமீது ஆடுதல் இயல்பாகலின் இவ்வாறு கூறினார். (22) |