விற்போர் 420. | தழல்படு கழைவனம் எப்படி அப்படி | | சடசட தமரமெ ழப்பக ழிப்படை அழல்படு புகையொடி ழிச்சிய கைச்சிலை அடுசிலை பகழிதொ டுத்துவ லிப்பரே. |
(பொ-நி.) இழிச்சிய கைச்சிலை பகழிப்படை. தமரம்எழ, சிலைபகழி தொடுத்து வலிப்பர்; (எ-று.) (வி-ம்.) தழல்-தீ. கழை-மூங்கில். தமரம்-ஒலி. பகழி-அம்பு. அழல்-தீ. இழிச்சிய-புறப்பட்ட. இழிச்சிய பகழிப்படை என்க. சிலை-வில். வலித்தல்- இழுத்துவிடுதல். எரியும் மூங்கிற்காட்டில் ஒலி உண்டாமறுபோல, ஒலியுண்டாகப் பகழி தொடுத்து வலிப்பர் என்க. (17) |