வெட்டுண்ட வில்வீரர் இயல்பு
 
421.அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும்
      அளவினில் அயமெதிர் விட்டவர் வெட்டின
உடல்சில இருதுணி பட்டன பட்டபின்
     ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே.

     (பொ-நி.) பகழி விடப்புகும் அளவினில், வெட்டின உடல்சில, இருதுணி
பட்டன; பட்டபின் ஒருதுணி இலக்கை அழிக்கும்; (எ-று.)

     (வி-ம்.) அடு - கொல்லுகின்ற.  சிை ல- வில். பகழி - அம்பு.  அயம்
எதிர்விட்டவர் - குதிரைகளை எதிர் செலுத்திவந்தவீரர்கள். துணி - துண்டம்.
இலக்கு-தாம் வெட்டுறாததற்குமுன் மனத்திற் கொண்ட இலக்கு. அம்பு வலித்த
அளவில் வெட்டுண்ட வில்வீரனின்  உடற்குறைகளும் தம் பண்டை இலக்கை
அழிக்கப்புகுந்தன     வென்க.     அஃதாவது     தாம்    குறித்தவற்றை
வெட்டப்புகும்போது வெட்டுற்ற  வீரர்களின்   உடலின்  ஒரு பகுதி தவறாது  வெட்டி முடித்ததென்க.                                       (18)