அவர் வில்லின் செயல் 422. | ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன | | உருவிய பிறைமுக அப்பக ழித்தலை அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்துவி ழுத்துமே. | (பொ-நி.) ஒரு துணி இலக்கை அழித்தன; (அவர்கள்) பகழித்தலை, பரி உய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்து விழுத்தும்; (எ-று.) (வி-ம்.) துணி-உடல் துண்டம். உருவிய-வில்லிலிருந்து உருவிச்சென்ற. பிறைமுகம்: அம்பின் ஒருபுறம் பிறை போன்றது. அப்பகழி-வில் வீரர் விட்ட அவ்வம்பு. தலை - நுனி. என - என்று கண்டார் சொல்ல. பரி உய்ப்பவர்- தம்முன் குதிரையைச் செலுத்திவந்தோர். அடி - கால். முடி-தலை. துணித்தல்-துண்டாக்கல். உடலின் ஒரு துண்டம் கருதிய இலக்கை அழிக்க அவர் விட்ட அம்பு, தம்மை வெட்டிய குதிரை வீரரின் கால்களையும் தலைகளையும் துணித்தன வென்க. (19) |
|
|