குதிரைவீரரால் அழிந்தோர் செயல்
 
424.நிறைசரம் நிமிரவி டத்துணி உற்றவர்
      நெறியினை ஒடியெறி கிற்பவ ரொத்தெதிர்
அறைகழல் விருதர்செ ருக்கற வெட்டலின்
     அவருடல் இருவகிர் பட்டன முட்டவே.

     (பொ-நி.) நிமிரவிட, துணி உற்றவர், ஒடி எறிகிற்பவர் ஒத்து, விருதர்
செருக்கு அற வெட்டலின், உடல் முட்டவகிர்பட்டன; (எ-று.)

     (வி-ம்.) விட - குதிரைவீரர் விட. துணியுற்றவர் - உடல்  துண்டுபட்ட வாள்வீரர். நெறி-வழி. ஒடி-புதர்கள். எறித்தல்-அழித்தல். எதிர்-தம்முன்னுள்ள.
கழல் - வீரக்கழல். விருதர் - வீரர்; விருது  பெற்றவர். செருக்கு - இறுமாப்பு.
வெட்டலின் - அவ் வீரரை வெட்டலின். அவர் - அவ்வீரர்கள். வகிர்-பிளவு.
முட்ட-முடிய. குதிரைவீரர் நெடுஞ் சரத்தால் உடல் துணியுற்ற வீரர் புதர்களை
அழிப்பது போன்று, தம்முன்னின்ற வீரர் தொகுதிகளை அழித்தனர் என்க.
                                                          (21)