கலிங்கவீரர் செயல் 425. | விடுத்த வீர ராயு தங்கள் | | மேல்வி ழாம ேலநிரைத் தெடுத்த வேலி போற்க லிங்கர் வட்ட ணங்கள் இட்டவே. |
(பொ-நி.) ஆயுதங்கள் மேல் விழாமலே நிரைத்து, எடுத்த வேலிபோல், கலிங்கர் வட்டணங்கள் இட்ட; (எ-று.) (வி-ம்.) விடுத்த-சோழவீரர் விடுத்த. நிரை-வரிசை. எடுத்த வேலிபோல்- கட்டிய மதில்போல. வட்டணங்கள்-கேடகங்கள். இட்ட-தோன்றி நின்றன. (22) |