துணிந்து வீழ்ந்த யானைத் துதிக்கைநிலை
 

428.மத்த யானை யின்க ரம்சு
      ருண்டு வீழ வன்சரம்
தைத்த போழ்தின் அக்க ரங்கள்
     சக்க ரங்க ளொக்குமே.

     (பொ-நி.)  யானையின்  கரம் சுருண்டு  வீழ, சரம் தைத்த போழ்தின்,
அக்கரங்கள் சக்கரங்கள் ஒக்கும்; (எ-று.)

     (வி-ம்.) மத்தம் - மதகுணம். கரம் - துதிக்கை.  சரம்-அம்பு. சுருண்டு-
சுருண்டுகொண்டு.                                          (25)