யானை மத்தகம் பிளந்தமை 429. | வெங்க ளிற்றின் மத்த கத்தின் | | வீழு முத்து வீரமா மங்கை யர்க்கு மங்க லப்பொ ரிச்சொ ரிந்த தொக்குமே. |
(பொ-நி.) மத்தகத்தின் வீழும் முத்து, பொரி சொரிந்த தொக்கும்; (எ-று.) (வி-ம்.) மத்தகத்தின்-மத்தகத்தினின்றும், வீர மா மங்கையர்-வெற்றி மடந்தையர். வீரமங்கையரை வீரர் போர்க்களத்தில் மணம் புரிந்தனர் என்க. மங்கலம் - மணவினை பொரி -நெற்பொரி (மணக்காலத்துச் சொரியப்படுவது). வீரர்யானை மத்தகத்தைப்பிளந்ததால் முத்துக்கள் சிந்தின என்க. (26) |