கன்னட நாட்டினரான பெண்களை விளித்தது 43. | மழலைத்திரு மொழியிற்சில வடுகும் சில தமிழும் | | குழறித்தரு கருநாடியர் கறுகிக்கடை திறமின். |
(பொ-நி) மொழியில், வடுகும் தமிழும் கு ழறித்தரு கருநாடியர் திறமின்; (எ-று)
(வி-ம்.) மொழி - சொல், வடுகு - தெலுங்கு. தரு - கொடுக்கின்ற. கருநாடியர் - கருநாடகம் என்ற நாட்டில் வாழ்ந்திருந்தவர். கருநடப் பெண்கள் தெலுங்கும் தமிழும் கலந்து பேசினர் என்க. குறுகி-வந்து. (23) |