கேடகத்தோடு வீரர் வீழ்ந்த நிலை 430. | மறிந்த கேட கம்கி டப்ப | | மைந்தர் துஞ்சி வைகுவோர் பறிந்த தேரின் நேமி யோடு பார்கி டப்ப தொக்குமே. |
(பொ-நி.) கேடகம் கிடப்ப, மைந்தர் வைகுவோர் தேரின் நேமியோடு பார்கிடப்ப தொக்கும்; (எ-று.) (வி-ம்.) மறிதல் - விழுதல். மைந்தர் - வீரர். துஞ்சுதல் - இறத்தல். வைகுவோர் - கிடப்போர். தேரின் பறிந்த என இயைக்க. பறிதல் - ஓடிப்போதல் நேமி-சக்கரம். பார் - வண்டியின் கீழ்ப்பக்கத்துள்ள நீண்ட மரத்துண்டம்; நுகத்தடியோடு இணைவது. (27) |