சக்கரப்படையும் தண்டுப்படையும் பொருதமை 431. | களித்த வீரர் விட்ட நேமி | | கண்டு வீசு தண்டிடைக் குளித்த போழ்து கைப்பி டித்த கூர்ம ழுக்க ளொக்குமே. |
(பொ-நி.) நேமி கண்டு, வீசு தண்டிடை, (அது) குளித்தபோழ்து, கூர்மழுக்கள் ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) களித்த வீரர் - களிப்புக்கொண்ட படைவீரர். நேமி-சக்கரம். தண்டு-தண்டாயுதம். குளித்தபோழ்து-அச்சக்கரம் தைத்தபோது. கைப்பிடித்த- கையிலெடுத்த. மழு-கோடரி போன்ற பரசுப்படை. (28) |