குறை உடலங்களின் ஆட்டம்
 

432.கவந்த மாட முன்பு தம்க
      ளிப்பொ டாடு பேயினம்
நிவந்த வாடல் ஆட்டு விக்கு
     நித்த காரர் ஒக்குமே.

     (பொ-நி.)  முன்பு  கவந்தம்  ஆட,  ஆடு  பேயினம்,  ஆட்டுவிக்கும்
நித்தகாரர் ஒக்கும்; (எ-று.)

     (வி-ம்.) கவந்தம்-குறைஉடல். தம் முன்பு என இயைக்க. தம்-பேய்தம்.
நிவப்பு-உயர்வு. ஆட்டுவிக்கும்-ஆடப் பழக்குகின்ற.  நித்தகாரர்-நிருத்தகாரர்:
ஆட்டுவிப்போர்.                                            (29)