யானை குதிரை ஒட்டகம் திரியுநிலை 433. | ஒட்ட கங்கள் யானை வாலு | | யர்த்த மாஅ ழிந்தபோர் விட்ட கன்று போகி லாது மீள்வ போலும் மீளுமே. |
(பொ-நி.) ஒட்டகங்கள், யானை, மா, போர்விட்டு, போகிலாது, மீள்வபோலும் மீளும்; (எ-று.) (வி-ம்.) வால் உயர்த்த மா - குதிரை. அழிந்த போர்-பலரும் பட்ட போர்க்களம். அகன்று போகிலாது - நீங்கிச் சொல்லாமல். மீள்வபோலும்- மீண்டும் பொரும்போலும். தம்மீது ஏறிச் செலுத்தியோர் பட்டமையின், அவை நெறியின்றித்திரிந்தன வென்க. (30) |