குருதி வெள்ளத்தில் பட்டு வீழ்ந்த யானையின் இயல்பு 434. | பிறங்கு சோரி வாரி யிற்பி | | ளிற்றி வீழ்க ளிற்றினம் கறங்கு வேலை நீரு ணக்க விழ்ந்த மேகம் ஒக்குமே. |
(பொ-நி.) சோரி வாரியில் வீழ் களிற்றினம், வேலை நீர் உண, கவிந்த மேகம் ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) பிறங்குதல் - நிறம் விளங்குதல். சோரி - குருதி. வாரி-கடல். பிளிற்றுதல்-வீறிடுதல். களிறு-யானை. கறங்குதல்-ஒலித்தல். வேலை-கடல்; கவிழ்ந்த-படிந்த.` (31) |