யானையின் துதிக்கை துணித்தோர் இயல்பு
 

435.வாளில் வெட்டி வார ணக்கை
      தோளில் இட்ட மைந்தர்தாம்
தோளில் இட்டு நீர்வி டுந்து
     ருத்தி யாளர் ஒப்பரே.

    (பொ-நி.) வாரணக்கை வெட்டி, தோளில் இட்டமைந்தர் துருத்தியாளர்
ஒப்பர்; (எ-று.)

     (வி-ம்.) வாளில்-வாளால்.  வாரணம்-யானை.  கை-துதிக்கை. தோளில்
இட்ட-தம்  தோள்களில்  கொண்ட.  மைந்தர்-வீரர்.  துருத்தி-நீர் நிறைத்து
ஒழுக்கும் பெருங்குழாய்.                                     (32)