அம்பு தொளைத்த வில்லோர் இயல்பு
 
436.நேர்முனையில் தொடுத்த பகழிகள்
      நேர்வளையில் சுழற்று மளவினில்
மார்பிடையில் குளித்த பகழியை
     வார்சிலையில் தொடுத்து விடுவரே.

     (பொ-நி.) பகழிகள் நேர்; வில்  சுழற்றும்  அளவினின், மார்பிடையில்
குளித்த பகழியை, சிலையில் தொடுத்து விடுவர்; (எ-று.)

     (வி-ம்.) நேர் - தனக்கு  நேர்;  எதிர்தலுமாம். முனை - போர்முனை
தொடுத்த  -  பகைவீரன்   தொடுத்த.   பகழி - அம்பு.   பகழிகள் நேர் -
பகழிகளுக்கு நேர் வளைவில்  - வளைந்த  வில்.  தம்மிடம்  தொடுத்துவிட  அம்பின்மையின், பகை அம்பைத்தடுக்கத்  தம் வில்லைச் சுழற்றினர்  என்க. குளித்த - தைத்த. பகழி-அம்பு. வார்-நீட்சி.
                                                        (33)