குதிரையை வீழ்த்திய வீரர் இயல்பு 437. | அசையஉரத் தழுத்தி இவுளியை | | அடுசவளத் தெடுத்த பொழுதவை விசையமகத் தெடுத்த கொடியென விருதர்களத் தெடுத்து வருவரே. |
(பொ-நி.) விருதர், சவளத்து, இவுளியை உரத்து அழுத்தி, எடுத்தபொழுது, அவை கொடி என, எடுத்து வருவர்; (எ-று.) (வி-ம்.) அசைய-வருந்த. உரம்-மார்பு. அழுத்தி-குத்தி. இவுளி-குதிரை. அடுதல்-கொல்லுதல். சவளம்-ஈட்டி. எடுத்தல்-தூக்கிப்பிடித்தல். விசைய மகள்- வெற்றிமகள் கொடி என - கொடி என்று கூறும்படி. என - என்று கண்டோர் சொல்ல. விருதர்-வீரர். களம்-போர்க்களம். (34) |