தொடை வெட்டுண்ட வீரர் செயல்

438.இருதொடையற் றிருக்கு மறவர்கள்
      எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட
ஒருதொடையைச் சுழற்றி எறிவர்கள்
     ஒருதொடைஇட் டுவைப்பர் எறியவே.

     (பொ-நி.)  மறவர்கள், களிற்றின்  வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி
எறிவர்கள்; ஒரு தொடை எறிய இட்டு வைப்பர்; (எ-று.)

     (வி-ம்.)  இருதொடை - தம்   இரண்டு  தொடைகளும.்  மறவர்கள்-
போர்வீரர்கள். கை - துதிக்கை. தொடை - வெட்டுண்டு பக்கத்தே  கிடக்கும்
தொடை. இட்டு வைப்பர்-போட்டிருப்பர். எறிய-மீண்டும் எறியவேண்டி.
                                                         (35)