| வாட்போர் | 439. | இருவருரத் தின்உற்ற சுரிகையின் | | | எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில் ஒருவரெனக் கிடைத்த பொழுதினில் உபயபலத் தெடுத்த தரவமே. |
(பொ-நி.) இழைக்கும் அளவினில், இருவர் உரத்தின் உற்ற சுரிகையின், ஒருவர் என, கிடைத்தபொழுதினில், அரவம் எடுத்த; (எ-று.) (வி-ம்.) உரம் -மார்பு. சுரிகை - உடைவாள். இழைத்தல்-போர்செய்தல். கிடைத்தல்-இயைதல். ஒருவர் வாள்மற்றொருவர் மார்பிலே புக, இருவரும் ஒருவரேபோல் தோன்றினர் என்க. உபயம்-இரண்டு. பலம்-சேனை. எடுத்தது- தோன்றியது; அரவம்-ஒலி. (36) |