ஊடலும் கூடலும் விழைந்த இயல்பு கூறி விளித்தது

44. தழுவுங் கொழுநர் பிழைநலியத்
  தழுவேல் என்னத் தழுவியகை
வழுவ உடனே மயங்கிடுவீர்
   மணிப்பொற் கபாடம் திறமினோ.

   (பொ-நி.) கொழுநர்  பிழை  நலிய, தழுவேல்  என்ன!  தழுவியகை
வழுவ, மயங்கிடுவீர் திறமின்; (எ-று.)

   (வி-ம்.) கொழுநர் - கணவர்.  நலிய-வருத்த.  என்ன-என்ன; என்று
கணவரை  நோக்கிக்கூற.  கை-கணவர் கை.  வழுவ -நழுவ. மயங்கிடுவீர்
-(புணர்ச்சி விருப்பால்). மயங்குவீர் மணிப்பொன்-அழகிய பொன்னாலான.
ஊடலால்  தழுவேல்  எனவும்  கணவர்  தழுவுதல்  ஒழியப், புணர்ச்சி
விருப்பால்  மனம்  வருந்தினர்  என்க. (24)