வீரர் யானைவீரரோடு பொருதமை 440. | பொருநர்கள் சிலர்தமு ரத்தி னிற்கவிழ் | | புகர்முகம் மிசையடி யிட்ட திற்பகை விருதரை அரிவர்சி ரத்தை அச்சிரம் விழுபொழு தறையெனும் அக்க ளிற்றையே. | (பொ-நி.) சிலர், புகர்முகம் மிசை அடி இட்டு, அதில்பகை விருதரை சிரத்தை அரிவர்; அச் சிரம் விழுபொழுது அறை எனும் ; (எ-று.) (வி-ம்.) பொருநர்-வீரர். உரம்-மார்பு. கவிழ்-கொல்லுதற்குக் கவிழ்ந்த. புகர்முகம் - யானை. அதில் - அவ்வானையின் மேல் இருந்த. விருதர் -வீரர். சிரம் - தலை. விழுபொழுது - கீழே விழுங்கால். அறை - (என்னை வெட்டியோனைக்) கொல். (37) |