படை அற்றோர் குதிரையொடு பொருதமை 441. | விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர் | | விரைபரி விழஎறி தற்கு முற்பட அடுகரி நுதல்பட விட்ட கைப்படை அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே. |
(பொ-நி.) சிலர், படைபெறுகிலர்; பரி எறிதற்கு கரிநுதல் படவிட்ட படை அதனை பறிப்பர்;(எ-று.) (வி-ம்.) படை - படைக்கருவி. விரைபரி: வினைத்தொகை. பரி-குதிரை. விழ-சாவ. எறிதற்கு-விடுதற்கு. முற்பட-முன்னமேயே. அடுகரி: வினைத்தொகை. கரி-யானை. நுதல்-நெற்றி. பட-அழுந்த. கை-தங் கை. படை - வாள், வேல் முதலியன. நொடி-கைநொடிப்பொழுது. வரை-அளவு. பறித்தல்-பிடுங்கல். (38) |