வீரன் யானைப்படையானோடு பொருத்து 442. | அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ் | | அடுகரி நுதலில டிப்பர் இக்களி றெமதென இருகண்வி ழிக்க உட்கினர் எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே. |
(பொ-நி.) அகலத்திடைக் கவிழ் கரிநுதலில் அடிப்பர்; வெட்கி, கண்விழிக்க உட்கினர் என விடுகிலர்; (எ-று.) (வி-ம்.) அமர் - போர். அமர்புரி கரி என இயைக்க. அகலம்-மார்பு. கவிழ்- தாக்குதற்குக் கவிழ்ந்த. கரி-யானை. நுதல்-முகம். உட்கினர்-அஞ்சினர். "என உட்கினர்" யானை வீரர். படைஞர்க்கு - படைவீரர்கட்கு. வெட்கி - வெட்கங்கொண்டு. விடுகிலர் - படைவிடுகிலர். அஞ்சிக் கண்மூடியமையின் அவர்மீது படை விடுகிலர் வீரர் என்க. (39) |