இருபடையும் கிளர்ந்தெழுந்தமை
 
445.அணிகள் ஒருமுக மாக உந்தின
      அமரர் அமரது காண முந்தினர்
துணிகள் படமத மாமு றிந்தன
     துரக நிரையொடு தேர்மு றிந்தவே.

     (பொ-நி.)  அணிகள்   உந்தின;   அமரர்   அமரது காணமுந்தினர்;
மதமா முறிந்தன; துரகநிரையொடு தேர் முறிந்த; (எ-று.)

     (வி-ம்.)  அணி - இருதிறத்துப்படை  வகுப்புக்களும்.   ஒருமுகமாக -
பரந்துபட்டு  இராமல். உந்துதல் -செலுத்தல்.  அமரர் -தேவர். அமர்-போர்.
துணி-துண்டம். மதமா - யானை. முறிந்தன - வெட்டுண்டன. துரகம்-குதிரை.
நிரை- வரிசை.                                            (42)