போரின் கடுமை
 
446.விருதர் இருதுணி பார்நி றைந்தன
      விடர்கள் தலைமலை யாய்நெ ளிந்தன
குருதி குரைகடல் போல்ப ரந்தன
     குடர்கள் குருதியின் மேல்மி தந்தவே

     (பொ-நி.)  துணி  பார்  நிறைந்தன  ;  தலை மலையாய் நெளிந்தன ;
குருதி கடல்போல் பரந்தன ; குடர்கள் மிதந்த ; (எ-று.)

     (வி-ம்.) விருதர் - வீரர். துணி - உடல் துணிந்த பகுதிகள். பார்-மண்.
விடர்-வீரர். நெளிதல் - உருண்டோடல். குருதி-செந்நீர். குரைத்தல்-ஒலித்தல். பரத்தல் - பரவுதல்.                                       (43)