இதுவும் அது

447.கரிகள் கருவிகளோடு சிந்தின
      கழுகு நரியொடு காகம் உண்டன
திரைகள் திசைமலை யோட டர்ந்தன
     திமில குமிலமெ லாம்வி ளைந்தவே.

     (பொ-நி.)  கரிகள்  சிந்தின;  காகம்  உண்டன; திரைகள் அடர்ந்தன;
திமில குமிலமெலாம் விளைந்த; (எ-று.)

     (வி-ம்.) கரி - யானை. கருவி - கூட்டம்.  திரை - குருதிநீரின் அலை.
திசைமலை -எட்டுத்திக்கு மலைகள். திமில குமிலம். ஒரு பொருட் பன்மொழி; பேரொலி. விளைந்த-உண்டாயின.                             (44)