கலிங்க வேந்தன் பொருதலாற்றாது ஒதுங்கியமை 448. | புரசை மதமலை ஆயி ரங்கொடு | | பொருவ மெனவரும் ஏழ்க லிங்கர்தம் அரசன் உரைசெய்த ஆண்மை யுங்கெட அமரில் எதிர்விழி யாதொ துங்கியே. | (பொ-நி.) மதமலை ஆயிரம் கொடு வரும் அரசன், ஆண்மையும் கெட எதிர் விழியாது ஒதுங்கி; (எ-று.) (வி-ம்.) புரசை- யானைக்கழுத்திடு கயிறு. மதமலை-யானை. பொருவம்- போர்செய்வோம். அரசன்: அனந்தபதுமன். உரைசெய்த-தான் உரைசெய்த. அமரில்-போர்க்களத்தில். எதிர் விழியாது-முகத்தைப் பார்க்காமல். (45) |