கலிங்க வேந்தன் களத்தைவிட்டு மறைந்து சென்றது 449. | அறியும் முழைகளி லோபதுங்கிய | | தரிய பிலனிடை யோம றைந்தது செறியும் அடவியி லோக ரந்தது தெரிய அரியதெ னாஅ டங்கவே. |
(பொ-நி.) பதுங்கியது முழைகளிலோ; மறைந்தது பிலனிடையோ, கரந்தது அடவியிலோ; தெரிய அரிது எனா அடங்க; (எ-று.) (வி-ம்.) முழை - மலைக்குகை. பிலன்-கீழறை.அடவி-காடு. கரந்தது - மறைந்தது. அடங்க - பதுங்கியிருக்க. (46) |