நகையின் சிறப்புக் கூறி விளித்தது

45. வேகம் விளைய வருங்கொழுநர்
     மேனி சிவந்த படிநோக்கிப்
போகம் விளைய நகைசெய்வீர்
   புனைபொற் கபாடம் திறமினோ.

   
    (பொ-நி.) கொழுநர்,   சிவந்தபடி  நோக்கி, போகம் விளைய, நகை
செய்வீர் ,திறமின்; (எ-று.)

    (வி-ம்.) வேகம்  விளைய-விரைவு  மிகுதிப்பட,  கொழுநர்-கணவர்.
மேனி-உடல்.  சிவந்தது  புணர்ச்சி  விழைவால்  என்க.  போகம்-கலவி .
விளைய - அதன்  பயனாய்  உண்டாக.  நகை - சிரிப்பு. நகைபோகத்தை
விளைத்த தென்க. புனை-அழகுபடுத்தப்பட்ட.                     (25)