கலிங்கர் நடுக்கம்
 

450.எதுகொல் இதுஇது மாயை ஒன்றுகொல்
      எரிகொல் மறலிகொல் ஊழியின்கடை
அதுகொல் எனவல றாவி ழுந்தனர்
     அலதி குலதியோ டேழ்க லிங்கரே.

     (பொ-நி.)  கலிங்கர் "மாயை  ஒன்று  கொல்,  எரிகொல், மறலிகொல்,
ஊழியின்கடை அதுகொல்" என அலறா விழுந்தனர்; (எ-று.)

     (வி-ம்.) இது - போர். மாயைஒன்று-ஒரு  மாயவித்தை.  எரி-தீ. மறலி-
யமன்.ஊழி-யுகம்.அலதி குலதி-அலைதல் குலைதல்.              (47)