கலிங்கர் சிதைந்தோடியது
 

451.வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
      மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
     இருவர் ஒருவழி போகல் இன்றியே.

     (பொ-நி.) ஒருவழி போகல் இன்றி, சிலர் வழிவர்; சிலர் கடல் பாய்வர்;
கரிமறைவர்; சிலர் பிலம் இழிவர்; சிலர் தூறு மண்டுவர்; (எ-று.)

     (வி-ம்.) வழிவர்-நழுவி ஓடுவர்.  கரி-யானையுள்.  பிலம் -மலைக்குகை.
இழிவர்-இறங்குவர். தூறு-புதர். மண்டுதல்-நெருங்குதல்.            (48)