இதுவும் அது 452. | ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் | | உடலின் நிழலினை ஓட அஞ்சினர் அருவர் வருவரெ னாவி றைஞ்சினர் அபயம் அபயமெ னாந டுங்கியே |
(பொ-நி.) ஓடமுந்தினர்; நிழலினை அஞ்சினர்; நடுங்கி இறைஞ்சினர்; (எ-று.) (வி-ம்.) முந்தினர் - முற்பட்டனர். ஓட, நிழலினை அஞ்சினர் என இயைக்க. அச்சமிகுதியால் தந்நிழலையும் கண்டு அஞ்சினர் என்க.அருவர்- தமிழர். இறைஞ்சினர்-வணங்கினர். (49) |