இதுவும் அது

454. ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
  ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே.

     (பொ-நி.)  ஒருவன்  கலிங்கம்  அழித்தநாள், ஒருவர்  உடுத்தது ஒரு
கலிங்கம்; (எ-று.)

     (வி-ம்.) ஒருவன்-கருணாகரன். கலிங்கம்-கலிங்ககநாடு. கலிங்கம்-ஆடை.
ஒருவர்  உடுத்தது - ஒவ்வொரு  வீரரும்  அணிந்தது. மேலாடையும் இழந்து
தோற்றோடினர் என்பதாம்.                                   (51)