கைப்பட்ட களிறுகளின் தன்மை
 
456. புண்தரு குருதி பாயப்
      பொழிதரு கடமும் பாய
வண்டொடும் பருந்தி னோடும்
     வளைப்புண்ட களிற நேகம்.

     (பொ-நி.)  குருதிபாய,  கடமும்  பாய, வண்டொடும்  பருந்தினோடும்
வளைப்புண்ட களிறு அநேகம்; (எ-று.)

     (வி-ம்.) குருதி-செந்நீர். கடம்-மதநீர். வளைப்புண்ட-சூழப்பட்டிருக்கின்ற.
குருதியைக் கண்டு பருந்துகளும்,  மதநீரைக் கண்டு  வண்டுகளும் தாம் தாம்
உண்பதற்குச் சுற்றின. ஆதலால் இவ்வாறு கூறினார்.              (53)