சோழவீரர் கவர்ந்த பொருள்கள்
 
459.நடைவ யப்பரி யிரதம் ஒட்டகம்
      நவதி திக்குல் மகளிரென்று
அடைய வப்பொழுது அவர்கள் கைக்கொளும்
     அவைக ணிப்பதும் அருமையே.

     (பொ-நி.) பரி, இரதம், ஒட்டகம், நிதிக்குலம், மகளிர் என்று அவர்கள்
கைக்கொளும் அவை கணிப்பதும் அருமை; (எ-று.)

     (வி-ம்.) வயம்-வலிமை. பரி-குதிரை. நிதி-செல்வம். அடைய -முழுதும்.
கணித்தல் - அளவிடல். அருமை - அரியதாகும்.                  (56)