கருணாகரன் கலிங்கவேந்தனைக் கொணருமாறு ஏவியது 460. | இவைக வர்ந்தபின் எழுக லிங்கர்தம் | | இறையை யுங்கொடு பெயர்துமென்று அவனி ருந்துழி அறிக வென்றனன் அபயன் மந்திரி முதல்வனே. | (பொ-நி.) மந்திரி முதல்வன், இவை கவர்ந்தபின், கலிங்கர் தம் இறையையும் கொடுபெயர்து மென்று அவன் இருந்து அறிக என்றனன்; (எ-று.) (வி-ம்.) கலிங்கர் தம்இறை - அனந்தபதுமன். கொடு - கொண்டு. பெயர்தும் - செல்வோம். அவன்: அனந்தபதுமன். உழி-இடம். அபயன் - குலோத்துங்கன்.முதல்வன்: கருணாகரன். (57) |