ஒற்றர்கள் கலிங்கர்கோனைத் தேடியமை
 
461.உரைகள் பிற்படு மளவில் ஒற்றர்கள்
      ஒலிக டற்படை கடிதுபோய்
வரைக ளில்புடை தடவி அப்படி
     வனமி லைப்புரை தடவியே

     (பொ-நி.)  ஒற்றர்கள்,  படை, போய்,  வரைகளில் புடைதடவி வனம்
இலைப்புரை தடவி; (எ-று.)

     (வி-ம்.)  உரை - கருணாகரன்   கட்டளை.  ஒற்றர்கள் - வேவுகாரர்;
ஒற்றியிருந்தறிபவர்  ஒற்றர்களும்  கடல் போன்ற படைகளும். என்க. வரை-
மலை. புடை  - பக்கம். அப்படி - அங்ஙனமே. வனம் - காடு.  இலைப்புரை  தடவி - இலைப்பொந்தினும் ஆராய்ந்து தேடி.
                                                         (58)