ஒற்றர்கள் மொழிந்தமை 462. | சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு | | சுவடு பெற்றனம் ஒருமலைக் குவடு பற்றியது அவன டற்படை அதுகு ணிப்பரிது எனலுமே. |
(பொ-நி.) அவனை சுவடு பெற்றிலம்; மற்றொரு சுவடு பெற்றனம்; அவன் படை மலைக்குவடு பற்றியது; அதுகுணிப்பரிது எனலும் ; (எ-று.) (வி-ம்.) சுவடு - அடையாளம். குவடு - உச்சி. அவன்: கலி்ங்கவேந்தன் படை - சேனை. குணித்தல் - அளவிடுதல். எனலும் - என ஒற்றர் சிலர் சொல்லுதலும். (59) |