அதுகேட்ட படைஞர் செய்தி
 
463. எக்குவடும் எக்கடலும் எந்தக் காடும்
       இனிக்கலிங்கர்க் கரணாவது இன்றே நாளும்
அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன்
     அத்தமனக் குவடணையும் அளவிற் சென்றே.

     (பொ-நி.)  இனி,  குவடும்  கடலும்  காடும்  கலிங்கர்க்கு அரணாவது
இன்று நாளும்  குவடும் கடலும்  வளைந்து  அத்தமனக்குவடணையு மளவில்  சென்று; (எ-று.)

     (வி-ம்.) குவடு-மலை. இனி-புலன் தெரிந்துவிட்டமையின் இனி. அரண்-
பாதுகாவல். இன்று - இல்லை. நாளும் - நாள் முழுதும். அ: கலிங்கநாட்டின்
கண்ணவற்றைக் குறித்தது:  வளைந்து - சுற்றிச்சுற்றிச்  சென்று  (கடைசியாக),
வெய்யோன் - ஞாயிறு.  அத்தமனக்குவடு - மறைகின்றமலை.  அஸ்தமனம்-
அத்தமனமெனத் தற்பவமாயிற்று.                              (60)