படைஞர் குன்றைச் சூழ்ந்து நின்றமை 464. | தோலாத களிற்றபயன் வேட்டைப்பன்றி | | தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார்போல வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பதனை விடியளவுங் காத்து நின்றே. |
(பொ-நி.) பன்றி தொழு அடைத்து, காப்பார் போல, வெற்பதனை வேலி கோலி, விடியளவும் காத்து நின்று; (எ-று.) (வி-ம்.) தோலாத - தோல்வியுறாத. வேட்டைப்பன்றி -வேட்டையிற் கொணர்ந்த பன்றி. தொழு விலங்குகளை அடைக்கும் பெரிய கூடு. கோலி- வளைத்து. வெற்பு-மலை. விடி அளவு-பொழுது விடியும்வரை. (61) |