குன்று காத்த கலிங்கவீரரை அழித்தமை 465. | செம்மலையாய் ஒளிபடைத்த தியாதோ என்றும் | | செங்கதிரோன் உதயஞ்செய்து உதய மென்னும் அம்மலையோ இம்மலையும் என்னத் தெவ்வர் அழிகுருதி நதிபரக்க அறுக்கும் போழ்தில். | (பொ-நி.) “இம்மலை, ஒளி படைத்தது, யாதோ? உதயமென்னும் அம்மலையோ இம்மலையும்,” என்ன, தெவ்வர் குருதி நதி பரக்க, அறுக்கும்போழ்து; (எ-று.) (வி-ம்.) செம்மலை - சிவந்த நிறமுள்ள மலை. யாதோ - யாது காரணமோ. என்றும்-எந்நாளும். என்ன-என்று கண்டார் சொல்ல. தெவ்வர் -பகைவர்.குருதி-செந்நீர். நதி-ஆறு.பரக்க-பரவிப்பாய. அறுத்தல்-அழித்தல். (62) |