இதுவும் அது 467. | வேடத்தால் குறையாது முந்நூலாக | | வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை ஆடப்போந் தகப்பட்டோம் கரந்தோம் என்றே அரிதனைவிட்டு உயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே. |
(பொ-நி.) அநேகர், சிலைநாண் முந்நூலாக இட்டு “கங்கை ஆடப்போந்து கரந்தோம், அகப்பட்டோம்“ என்று உயிர் பிழைத்தார்; (எ-று.) (வி-ம்.) முந்நூல்-முப்புரியுள்ள பூணூல். சிலை-வில் - நாண் - கயிறு. முடித்திட்டு - சுருட்டிக் கட்டி. விதி - முறைமை. கரந்தோம் - போர்ப் படையைக்கண்டு மறைந்தோம். அரி-போர்க்கருவி; மலையுமாம். (64) |