இதுவும் அது 469. | சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம் | | தெலுங்கரேம் என்றுசில கலிங்கர் தங்கள் ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்டு அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே. |
(பொ-நி.) அநேகர் “ தெலுங்கரேம், களம் கண்டேம், நினறேம்“ என்று தாளம் பிடித்து, கும்பிட்டு பாணரெனப் பிழைத்தார்; (எ-று.) (வி-ம்.) சேனைமடி - படைகள் இறந்துபட்ட. தெலுங்கரேம் - யாம் தெலுங்கு நாட்டினோம். களம்-போர்க்களம். சில மணி என இயைக்க.தாளம் பிடித்து - தாளமாகக்கொண்டு, அடி - அடிபற்றி வாழும். பாணரென -பாணரெனக் கண்டார் கொள்ளுமாறு. (66) |