நகக்குறி கண்டு களித்தமை கூறி விளித்தது

47. முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
      முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
   கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின.்
  
     (பொ-நி) யாரேனும்  இல்லா இடத்தே, கலை நீவி, முலைமீது நகம்
மேவு குறியை, கண்ணுற்று, களிப்பீர்கள் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) கொழுநர்  - கணவர்.  முன்  செல்வம்  இல்லாத  அவர்-
இதற்குமுன் பொருள் இல்லாதவர்; வறிஞர். பொருள்-செல்வம். யார்ஏனும்-ஒருவராவது,  கலை - மேலாடை. நீவி - விலக்கி.  இவ்வாறு கண்ணுறுதல்
கலவி நிலையை நினைந்து மகிழ்தற்கென்க.                       (27)