சோழவீரர் கலிங்கர் அற அழித்தது
 
470.இவர்கள்மேல் இனியொருவர் பிழைத்தார் இல்லை
      எழுகலிங்கத்து ஓவியர்கள் எழுதி வைத்த
சுவர்கள்மேல் உடலன்றி உடல்க ளெங்கும்
     தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் அடைய ஆங்கே.

      (பொ-நி.)  இவர்கள்  மேல்  ஒருவர்  பிழைத்தார்  இல்லை. எழுதி
வைத்த   உடல்  அன்றி  முன்  தொடர்ந்து  பிடித்து  உடல்கள்  அடைய
அறுத்தார்; (எ-று.)

     (வி-ம்.) இவர்கள் - மாற்றுருக்கொண்டு  பிழைத்தோர்.  ஓவியர்கள்
-சித்திரமெழுதுவோர். சுவர்கள்மேல்-மதில்களின் மீது.  தொடர்ந்து  பிடித்து
-பின்தொடர்ந்து சென்று பிடித்து வந்து. அடைய-முற்றும்.
                                                           (67)