கருணாகரன் குலோத்துங்கன் கழல் பணிந்தது 471. | கடற்கலிங்கம் எறிந்து சயத் தம்பம் நாட்டிக் | | கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச் சுடர்ப்படைவாள் அபயனடி அருளி னோடுஞ் சூடினான் வண்டையர்கோன் தொண்டைமானே. | (பொ-நி.) வண்டையர்கோன் (ஆகிய) தொண்டைமான் எறிந்து, நாட்டி,கவர்ந்து, அபயன் அடி சூடினான்; (எ-று.) (வி-ம்.) கடல்கலிங்கம்; நாடு. சயத்தம்பம் - வெற்றித்தூண், கடகரி -மதயானை. குவிதனம் - குவியலாக உள்ள பொருள்கள். அடிசூடினான் -அடிகளை வணங்கினான். (68) |